Last Updated:
நியூயார்க் Pokémon card விற்பனை மையத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான Pokémon card துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான போகிமொன் அட்டைகளை (Pokémon card) துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள போகிமொன் அட்டை விற்பனை மையத்தில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில், 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போகிமொன் அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்களை காட்சிப்படுத்தினர். அப்போது, முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று துப்பாக்கியை காட்டி மிரட்டி அனைவரையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். தொடர்ந்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போகிமொன் அட்டைகளை அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான போகிமொன் அட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அனைத்து போகிமொன் அட்டை கடைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போகிமொன் அட்டைகளை துப்பாக்கி முனையில் திருடிச்சென்ற கொள்ளையன்.. பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!


