Last Updated:
விலா எலும்பு பாதிப்பு மற்றும் தசை பிடிப்பு காரணமாக வாஷிங்டன் சுந்தர் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ள திலக் வர்மாவும் பங்கேற்க முடியாத நிலை ஏறபட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடும் இந்திய அணியில், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரேயாஸ் இடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், நாளை நடைபெறும் போட்டியில் வென்று இந்தியா தொடரை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, வரும் 21ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் பட்டியல் வெளியாகி உள்ளது. விலா எலும்பு பாதிப்பு மற்றும் தசை பிடிப்பு காரணமாக வாஷிங்டன் சுந்தர் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ள திலக் வர்மாவும் பங்கேற்க முடியாத நிலை ஏறபட்டுள்ளது.
இந்நிலையில், முதல் 3 போட்டிகளில் ஸ்ரேயஸ் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 42 டி20 போட்டியில் ஆடி 61 விக்கெட் கைப்பற்றியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (முதல் 3 டி20), ஹர்டிக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்புரித் பும்ரா, ஹர்சித் ராணா, ஹர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷன் கிஷான், ரவி பிஸ்னாய்


