Last Updated:
டெல்லி இந்திரா பவனில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, வியூகங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள இந்திரா பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர் . ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியில் சிலர் குரல் எழுப்பிய நிலையிலும், ஜனநாயகன் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவிருந்த கூட்டம் ஒருநாளுக்கு முன்பே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது


