ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், ” வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார்.
நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா!” என்று பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்!
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, ” தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

