Last Updated:
“தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்” என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உயிரோட்டமுள்ள உதாரணமாக காசி தமிழ் சங்கமம் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சோம்நாத் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டின் நிகழ்வில் கலந்துகொள்ள அண்மையில் சோம்நாத் சுயமரியாதை விழாவிற்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த மக்கள் செளராஷ்டிர தமிழ் சங்கமம் மற்றும் காசி தமிழ் சங்கமம் குறித்த முயற்சியைப் பாராட்டியதாக இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கோட்பாடு எவ்வாறு வலுப்பெறுகிறது என்பது குறித்து அவர்களுடன் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்” என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஜனவரி மாதத்தில் சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயணம், பொங்கல், மகா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வரும்நிலையில், இந்த பண்டிகைகள் மக்கள் ஒருங்கிணைந்து நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.