Last Updated:
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் மணிலாவில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து, சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக ராணுவ பயிற்சி, வரி விலக்கு, இயற்கை பேரிடர் ஒத்துழைப்பு, அமெரிக்கா ஆதரவு.
சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் கிழக்கு சீன கடல் பகுதி மற்றும் தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவால் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. இருநாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க தலையீடு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான்- பிலிப்பைன்ஸ் இடையே மணிலாவில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் போது, ஆயுதங்கள், எரிப்பொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இயற்கை பேரிடர்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா உடனான உறவை மீண்டும் வலுப்படுத்த இருநாடுகளும் முடிவு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


