கோலாலம்பூர்:
மலேசிய ஆயுதப்படை நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சுமார் 8.42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கம் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2.49 கிலோ எடையுள்ள 66 தங்க கட்டிகள், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் (Mercedes Benz A-Class), டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) உட்பட 3 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1.3 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் மற்றும் 721,000 ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் என்பனவற்றுடன் 4.7 மில்லியன் ரிங்கிட் இருப்பு கொண்ட 8 நிறுவனக் கணக்குகள் மற்றும் 4 தனிநபர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கி, இரண்டு மூத்த ஆயுதப்படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.




