பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் பலனை பெற, விவசாயிகள் e-KYC-ஐ பூர்த்தி செய்து, தங்கள் வங்கிக் கணக்குகளை ஆதார் (UID) உடன் இணைத்து, தங்கள் நிலப் பதிவுகள் PM-Kisan போர்ட்டலில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அறிக்கைகளின்படி, PM கிசான் திட்டத்தின் 22வது தவணை பிப்ரவரி மற்றும் மார்ச் 2026க்கு இடையில் வெளியிடப்படலாம். இருப்பினும், அதற்கான அதிகாரப்பூர்வ தேதியை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. பொதுவாக 4 மாதங்களுக்கு ஒருமுறை தவணைகள் வெளியிடப்படும், ஒவ்வொரு தவணையும் ரூ.2,000 ஆகும். இதுவரை 21 தவணைகளை அரசு வெளியிட்டுள்ளது. முந்தைய தவணையானது நவம்பர் 19, 2025 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
PM கிசான் திட்டத்தில் e-KYC கட்டாயம். ஏனெனில், இது பெனிபிஸியரி அடையாளத்தைச் சரிபார்க்கவும், நிதி உதவிகள் சரியான நபர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், தகுதியான விவசாயிகளுக்கு நிதியை தடையின்றி வழங்கவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து PM-கிசான் மொபைல் ஆப் மற்றும் ஆதார் ஃபேஸ் RD ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.
2: PM-கிசான் ஆப்பை ஓபன் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
3: பெனிபிஸியரி ஸ்டேட்டஸ் பக்கத்திற்குச் செல்லவும்.
4: உங்கள் e-KYC ஸ்டேட்டஸ் “நோ” என்று காட்டினால், e-KYC என்பதை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை என்டர் செய்து, பேஸ் ஸ்கேன் செய்ய அனுமதி அளிக்கவும்.
உங்கள் முகம் வெற்றிகரமாக ஸ்கேன் செய்யப்பட்டவுடன் உங்கள் eKYC நிறைவடையும். இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி முடிக்கப்பட்ட eKYC, 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் பெனிபிஸியரி ஸ்டேட்டஸில் பிரதிபலிக்கும்.
PM-கிசான் போர்ட்டல் அல்லது மொபைல் ஆப் மூலம் OTP அடிப்படையிலான e-KYC
காமன் சர்வீஸ் சென்டர்கள் (CSCs) மற்றும் ஸ்டேட் சேவா கேந்திரங்கள் (SSKs) இல் பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC
PM-கிசான் மொபைல் ஆப் மூலம் பேஸ் ஆதென்டிகேஷன் அடிப்படையிலான e-KYC
விவசாயிகள் PM கிசானின் பலனைப் பெறாதவகையில் அரசாங்கம் இதுபோன்ற சில விதிகளையும் உருவாக்கியுள்ளது.
01-02-2019 க்குப் பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள் அல்லது கணவன்-மனைவி அல்லது பெரியவர்கள் மற்றும் மைனர்கள் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் திட்டத்தின் பயனைப் பெறும் குடும்பங்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிஸிக்கல் வெரிஃபிகேஷன் முடியும்வரை சலுகைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.
விவசாயிகள் தங்கள் தகுதியை சரிபார்க்க PM கிசான் இணையதளம் அல்லது மொபைல் ஆப்-ல் உள்ள “Know Your Status” (KYS) விருப்பம் அல்லது Kisan eMitra சாட்போட் மூலம் சரிபார்க்கலாம்.

