Last Updated:
ஆலோசனைக் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் வரும் சனிக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
Jan 15, 2026 12:09 PM IST


