முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி:
அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸிஸும் களமிறங்கினர். அதில் கோலி 33 ரன்கள் எடுத்திருந்தபோது, சாஹல் பந்தில், அவுட்டானார். அதேபோல், டூ பிளெஸிஸும் போல்ட்டின் பந்தில் 17 ரன்கள் எடுத்தபோது பவுலிடம் கேட்ச் கொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார். பின், கேமரூன் கிரீன் 3ஆவது வீரராக களமிறங்கி 27 ரன்கள் எடுத்தபோது, அஸ்வினின் சுழலில் பவுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் ரஜட் படிடர், 4ஆவதாக களமிறங்கி நிதானமாக ஆடி 34 ரன்கள் எடுத்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக, ஆவேஷ் கான் பந்தில்,பாரக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

