பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது. இதுதவிர, சில தனியார் நிறுவங்களும் போனஸ் வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளது. பொங்கல் செலவுகள் அதிகமாக இருந்தாலும் சற்று சிக்கனப்படுத்தி சேமித்து அதனை முதலீடாக மாற்றிட முடியும். வருமான வரி செலுத்துவது ஒரு குடிமகனாக நமக்கான கடமை. ஆனால், அந்த வரியை பொங்கல் பண்டிகை நேரத்தில் “சிறந்த முதலீட்டாக” மாற்றும் வாய்ப்பும் நமக்குள்ளது. PPF, ELSS, LIC, NPS போன்ற 80C திட்டங்களில் சேமித்து முதலீடு செய்வதன் மூலம், குறைந்த ரிஸ்க் மற்றும் நீண்டகால நிதி பாதுகாப்பு – இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியும். இந்த பொங்கல், உங்கள் சேமிப்பு பழக்கத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரலாம்.


