Last Updated:
US import Tariffs | ஈரானை மிரட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு தற்போது விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி உடனடியாக விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் 25 சதவீதம் வரி விதிக்கவுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி, 25 சதவீதம் வரியை விதித்தார். பின்னர், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25 சதவிகித வரி விதித்தார்.
இதனால் தமிழ்நாட்டின் திருப்பூர் உற்பத்தியாளர்கள் உட்பட நாடு முழுவதும் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், ரஷ்யாவுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் சட்டமசோதாவையும் நிறைவேற்ற அனுமதி அளித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறார்.
இந்தச் சூழலில் ஈரானை மிரட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு தற்போது விதிக்கப்படும் வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி உடனடியாக விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஈரானுடன் அதிக அளவில் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில், இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவுக்கு முக்கிய வர்த்தக நட்பு நாடுகள் என்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியா ஏற்றுமதி பொருட்களுக்கு மேலும் 25 % வரி அறிவிப்பு… மீண்டும் ஷாக் கொடுத்த அமெரிக்கா


