Last Updated:
அமேசானின் Great Republic Day Sale 2026 விற்பனையானது வரும் ஜனவரி 16 அன்று தொடங்கும் என்று நிறுவனம் இதற்கான பிரத்யேக மைக்ரோசைட் மூலம் தெரிவித்துள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், 2026-ஆம் ஆண்டிற்கான கிரேட் ரிபப்ளிக் டே சேல் இந்த ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு விற்பனையின்போது, ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள், கேமிங் கன்சோல்கள், ஸ்மார்ட் கிளாஸ்கள், வாஷிங் மெஷின்கள், ப்ரொஜெக்டர்கள், ஸ்மார்ட் டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை, கிட்டத்தட்ட அதே நேரத்தில் துவங்க உள்ள ஃபிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை 2026-க்கு போட்டியாகவும் இருக்கும்.
அமேசானின் Great Republic Day Sale 2026 விற்பனையானது வரும் ஜனவரி 16 அன்று தொடங்கும் என்று நிறுவனம் இதற்கான பிரத்யேக மைக்ரோசைட் மூலம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை நிகழ்வு, வரும் ஜனவரி 26 அன்று நாட்டின் 77-ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த விற்பனையின்போது வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய வங்கித் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்தும் சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.
SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் பர்ச்சேஸ்களின்போது 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டையும், எளிதான EMI விருப்பங்களையும் பெற முடியும். Great Republic Day Sale 2026-ல் “8 pm டீல்ஸ்”, “ட்ரெண்டிங் டீல்ஸ்”, “பிளாக்பஸ்டர் டீல்ஸ்”, “பிளாக்பஸ்டர் டீல்ஸ் வித் எக்ஸ்சேஞ்ச்” மற்றும் “டாப் 100 டீல்ஸ்” போன்றவை இடம்பெறும். இவை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். மேலும், அமேசான் பிரைம் உறுப்பினர்கள் தயாரிப்புகளை வாங்கும்போது பிரத்யேக சலுகைகளைப் பெற முடியும்.
இந்த சிறப்பு விற்பனை நிகழ்வின்போது சலுகை விலையில் கிடைக்கும் தயாரிப்புகள் குறித்த தகவல் வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவான பரிவர்த்தனைக்காக வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை அமேசான் ப்ரொஃபைல்களில் சேர்ப்பது நல்லது என்றும் நிறுவனம் அறிவுறுத்துகிறது. தவிர அமேசான் யூஸர்கள் தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செயல்படுத்தவும், தங்கள் டெலிவரி முகவரியை சேமிக்க அல்லது புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அமேசானின் இந்த விற்பனை வரும் ஜனவரி 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஃபிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை 2026 உடன் போட்டியிடும். ஃபிளிப்கார்ட் பிளாக் மற்றும் ஃபிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு அதன் விற்பனை நிகழ்வுக்கு 24 மணிநேர முன்கூட்டியே அணுகலை வழங்குவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இ-காமர்ஸ் தளம் 10 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் “எளிதான EMI” விருப்பங்களையும் வழங்கும்.
அமேசானின் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026… எப்போது துவங்குகிறது…? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…


