Last Updated:
2020 மற்றும் 2025ஆம் ஆண்டு வார இறுதியில் சனிக்கிழமை ஏற்கெனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. வரும் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஆய்விற்கும், நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பட்ஜெட்டைச் செயல்படுத்துவதற்கும் போதுமான அவகாசம் அளிக்கும் வகையில், 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் அன்றைய தினத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என கேள்வி எழுந்தது.
2020 மற்றும் 2025ஆம் ஆண்டு வார இறுதியில் சனிக்கிழமை ஏற்கெனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி, குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்குகிறது.
அடுத்த நாளான 29ஆம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
ஜன.28-ல் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்… இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல்!


