• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதா..? விபரம் இதோ! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதா..? விபரம் இதோ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி, முன்பு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

விளம்பரம்

லீக் சுற்றில் முதல் 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆர்.சி.பி அணி அடுத்த 6 போட்டிகளிலும் தொடர்ந்து வென்று, நெட் ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் கடைசி 5 போட்டிகளில் நான்கில் அந்த அணி தோல்வி அடைந்து மூன்றாம் இடத்தை மட்டுமே அதனால் பிடிக்க முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று பல பரிட்சை நடத்துகின்றன. இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

விளம்பரம்

வெற்றி பெறக்கூடிய அணி நாளை மறுதினம் நடைபெற உள்ள குவாலிபயர் 2 போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளும். இந்த சூழலில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி முன்பு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய கொல்கத்தா அணி அதில் ஆர்.சி.பி-யையும், குவாலிபையர் 2 போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தியது. இருப்பினும் சென்னை அணியிடம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க – ஐபிஎல் இறுதி போட்டிக்கு 4 ஆவது முறையாக முன்னேறிய கேகேஆர்

விளம்பரம்

2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதில் கொல்கத்தாவையும், குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் அணியையும் வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி-யை வென்று டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை கைப்பற்றியது.

அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்றில் விளையாடி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற எந்த அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? – ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Next Post

மாதம் ரூ.50,000 ஊதியமா?ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்

Next Post
மாதம் ரூ.50,000 ஊதியமா?ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்

மாதம் ரூ.50,000 ஊதியமா?ரூ.20,000 முதலீடு செய்தால் ரூ.1.84 கோடி பெறலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin