தற்போது உள்ள காலக்கட்டத்தில் சேமிப்பதற்கு பல புதிய முதலீட்டு வழிகள் இருந்தாலும், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மக்களிடையே இன்னும் பிரபலமாக உள்ளது. ஏனென்றால், இவை முழுமையாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. எனவே, உங்கள் பணம் இங்கு பாதுகாப்பாக இருக்கும். 15 முதல் 21 ஆண்டுகள் வரை ஒரு குழந்தையின் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு திட்டமிடும்போது, ஆபத்தை விட உறுதியான மற்றும் நிலையான வருமானம் முக்கியமானது. அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பெற்றோர்களுக்கு நம்பகமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.


