• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

10 மகள்களை பெற்ற தம்பதிக்கு 11வது பிரசவத்தில் ஆண் குழந்தை..! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 8, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
10 மகள்களை பெற்ற தம்பதிக்கு 11வது பிரசவத்தில் ஆண் குழந்தை..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 08, 2026 10:05 AM IST

இது மிகவும் ஆபத்தான பிரசவம் என்றாலும் தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் நர்வீர் ஷியோரன் குறிப்பிட்டுள்ளார்.

Rapid Read
News18
News18

ஹரியானாவில் கூலித் தொழிலாளர் தம்பதிக்கு 10 பெண் பிள்ளைகளுக்குப் பிறகு 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பொருளாதாரச் சுமை, குழந்தை வளர்ப்பிற்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாதது, கூட்டுக் குடும்பங்கள் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்தியக் குடும்பங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் எனச் சுருங்கின. பின்னாளில், இது நாம் இருவர் நமக்கு ஒருவர் என மாறியது. ஆனால், தற்போது இது Childfree By Choice எனவும், DINK எனவும் ஒரு படி மேலே சென்றுள்ளது. Double Income, No Kids என்பதைத்தான் சுருக்கமாக DINK என அழைக்கின்றனர் 2K Kids. DINKWAD… இது DINK-ன் ஒரு நவீன வடிவம். இதன் விரிவாக்கம்: Double Income, No Kids, With A Dog ஆகும். குழந்தைகளுக்குப் பதிலாக நாய்களை வளர்க்கும் தம்பதிகளை இது குறிக்கிறது.

நிலைமை இப்படி சென்றுக்கொண்டிருக்க ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளி ஒருவர் 11-வது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 2007-ல் திருமணம் செய்துகொண்ட சஞ்சய் குமார் தம்பதிக்கு முதலாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை வேண்டும் எனக் கருதிய அத்தம்பதி மீண்டும் மீண்டும் முயல அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், 37 வயதான சஞ்சயின் மனைவி மீண்டும் கருத்தரித்தார். இந்த முறை அவர் விரும்பியது போலவே 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது மிகவும் ஆபத்தான பிரசவம் என்றாலும் தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் நர்வீர் ஷியோரன் குறிப்பிட்டுள்ளார். தம்பியின் வரவால் மகிழ்ச்சியடைந்துள்ள சகோதரிகள், அவருக்கு Dilkhush எனப் பெயரிட்டுள்ளனர். சஞ்சய் குமாரின் மூத்த மகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு கூலித் தொழிலாளியின் வருமானத்தில் 10 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை எப்படி வளர்த்தெடுப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “பெண் குழந்தைகளும் ஆண்களுக்கு நிகரானவர்களே” என்ற விழிப்புணர்வு பெருகி வரும் காலத்தில், ஆண் குழந்தைக்காக 11 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பழைய சிந்தனை முறையையே காட்டுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Read More

Previous Post

சேதங்களுக்கான கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு

Next Post

Gold Loan | நகை கடன் வாங்கப் போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! | வணிகம்

Next Post
Gold Loan | நகை கடன் வாங்கப் போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! | வணிகம்

Gold Loan | நகை கடன் வாங்கப் போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin