• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்… எங்கு அமைக்கப்படுகிறது தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகின் மிகப்பெரிய விமான நிலையம்… எங்கு அமைக்கப்படுகிறது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் பணிகள் முழுவதுமாக நிறைவடையும்போது இதுதான் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.

இங்கு 260 மில்லியன் பயணிகளை கையாளும் அளவிற்கு வசதியுள்ளது. இந்த விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பரப்பு 12,000 கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அல் மாக்தோம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் டெர்மினலுக்கான வடிவமைப்பிற்கு சமீபத்தில் தான் துபாய் மன்னர் ஷேக் முகமது ரஷீத் அல் மாக்தோம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

விளம்பரம்

News18

இதன் மதிப்பு 34.85 மில்லியன் அமெரிக்க டாலராகும். தற்போது இருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அளவை விட புதிய விமான நிலையம் ஐந்து மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் இனி வரும் காலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இங்கு மாற்றப்படும் என ஷேக் முகமது தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகளும் வருடத்திற்கு 12 மில்லியன் டன் கார்கோ கையாளும் வசதியும் உள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த புதிய விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பரப்பு 70 சதுர கிலோ மீட்டராகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்.. தமிழுக்கு எந்த இடம் தெரியுமா?

இந்த விமான நிலையம் 400 விமான வாயில்களையும் 5 ஓடுபாதைகளையும் கொண்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்து துறையில் முதல்முறையாக இங்கு புதிய விமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்த உள்ளது என ஷேக் முகமது X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுதவிர தெற்கு துபாயில் உள்ள இந்த விமான நிலையத்தை சுற்றிலும் புதிய நகரம் ஒன்றை அமைக்கவும் ஷேக் முகமது அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமான நிலையம், துறைமுகம், நகர்ப்புற மையம் என புதிய உலகளாவிய மையமாக துபாய் திகழ்வதாக ஷேக் முகமது கூறியுள்ளார்.

விளம்பரம்

News18

மேலும் அவர் கூறுகையில், இந்த விமான நிலையத்தை சுற்றி அமையவுள்ள நகரங்களில் லட்சக்கணக்கானோருக்கு வீடு கட்டி கொடுக்கவுள்ளோம். எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் நிலையான வளர்ச்சியை உறுதி செயும் வகையில் எதிர்கால தலைமுறையினருக்கான புதிய திட்டங்களை கட்டமைத்து வருகிறோம். இந்த விமான நிலையத்தில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விமான துறையை சேர்ந்த பல முன்னனி நிறுவனங்கள் அமையவுள்ளது என்றார்.

இந்த விமான நிலையம் முன்னனி விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் பட்ஜெட் பிரிவு நிறுவனமான ஃப்ளைதுபாயின் புதிய மையமாக திகழவுள்ளது. மேலும் உலகின் பல நாடுகளை துபாயோடு இணைக்கும் பாலமாகவும் இது செயல்படவுள்ளது.

.

Read More

Previous Post

அட்சய திருதியை 2024: சென்னையில் தங்கம் விலை உயர்வு | akshaya tritiya 2024: Gold price soars high in Chennai

Next Post

ஒற்றுமையை வலுப்படுத்த கொண்டாட்டங்கள், கலாச்சாரங்களைப் பயன்படுத்துங்கள் – அன்வார் | Makkal Osai

Next Post
ஒற்றுமையை வலுப்படுத்த கொண்டாட்டங்கள், கலாச்சாரங்களைப் பயன்படுத்துங்கள் – அன்வார் | Makkal Osai

ஒற்றுமையை வலுப்படுத்த கொண்டாட்டங்கள், கலாச்சாரங்களைப் பயன்படுத்துங்கள் - அன்வார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin