கோலாலம்பூர்:
ஜனவரி 8 முதல் ஜனவரி 14 வரை நடைமுறையில் இருக்கும் வகையில் RON97, மானியமில்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதில் அடுத்த வாரத்திற்கு RON97 பெட்ரோலின் சில்லறை விலை ஐந்து சென் குறைந்து லிட்டருக்கு RM3.11 ஆக இருக்கும்.
அதேநேரம் மானியமில்லாத RON95 இன் விலையும் இரண்டு சென் குறைந்து லிட்டருக்கு RM2.54 ஆக இருக்கும். என்று நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் தீபகற்ப மலேசியாவில், டீசலின் சில்லறை விலை ஐந்து சென் குறைந்து லிட்டருக்கு RM2.89 ஆக இருக்கும். சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆக மாறாமல் இருக்கும்.
புடி மதனி RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆகவே தொடர்ந்து இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விலை நகர்வுகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.




