36 ஆண்டுகள் அவர் அமெரிக்காவில் செனட்டராகவும், 8 ஆண்டுகள் துணை அதிபராகவும் பணியாற்றியதால், இந்தத் திட்டத்தின் கீழ் அவருக்கு ஆண்டுக்கு சுமார் 166,374 டாலர் பென்சன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்த்து பெறுவதால் யாரும் பெறாத அதிக தொகையை பென்சனாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பெற்று வரும் ஓய்வூதியம் என்பது 207,800 டாலர் மட்டுமே. அதை விட பைடனின் ஓய்வூதியம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


