Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, மொத்த வாக்காளர்கள் 12.55 கோடியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
SIR நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போது உத்தரப்பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12.55 கோடியாக உள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், இரண்டு கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்தாண்டு அக்டோபர் 27 ஆம் தேதி சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப்பணி தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக வரைவு வாக்காளர் பட்டியலை அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கோடியே 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, உயிரிழந்தோர், குடிபெயர்ந்தோர், இரட்டை பதிவு உள்ளிட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நவ்தீப் ரின்வா குறிப்பிட்டுள்ளார்.
SIR | உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் – வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்


