• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெண்களுக்கான மத்திய அரசின் 2 அசத்தல் திட்டங்கள்.. இத்தனை நன்மைகள் இருக்கா?

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பெண்களுக்கான மத்திய அரசின் 2 அசத்தல் திட்டங்கள்.. இத்தனை நன்மைகள் இருக்கா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறிப்பிட்ட சமூக – பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பெண்களுக்காக அரசு அறிமுகப்படுத்தும் சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் அவர்களுக்கு நிதி சேவைகளை அணுகவும், அவர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. அந்தவகையில் சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் மகிளா சம்மான் சேவிங் சர்டிஃபிகேட் ஆகிய 2 திட்டங்கள் மேற்கண்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் பெண்கள் தங்கள் நிதி மீது அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க மற்றும் நிதி முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

விளம்பரம்

mahila samman savings certificate scheme: Mahila Samman Savings Certificate Scheme mobilises Rs 8,630 cr: FinMin - The Economic Times

மகிளா சம்மான் சேவிங் சர்டிஃபிகேட் (MSSC) என்றால் என்ன?

Mahila Samman Saving Certificate திட்டமானது கடந்த 2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது ஒருமுறை முதலீடு செய்ய கூடிய மத்திய அரசின் புதிய சிறுசேமிப்புத் திட்டமாகும். மகிளா சம்மான் சேவிங் சர்டிஃபிகேட் திட்டமானது மார்ச் 2025 வரை அமலில் இருக்கும். வயதை பொருட்படுத்தாமல் எந்தவொரு இந்திய பெண்ணும்,இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டமானது 2 வருட காலத்திற்கு பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யும் வசதியை வழங்குகிறது. 7.5% என்ற நிலையான வட்டி விகிதத்தில் பகுதியளவு திரும்ப பெறும் (partial withdrawal) ஆப்ஷனுடன் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது குறுகிய காலத்திற்கு ஒரு பெண்ணின் பெயரில் முதலீடு செய்யப்படும் FD-க்களுக்கு பொருத்தமான மாற்றாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

கூடுதலாக ஆண் பாதுகாவலர்கள் (male guardians) உட்பட சட்டப்பூர்வ அல்லது இயற்கையான பாதுகாவலர், மைனர் பெண் குழந்தைகளின் பெயரில் MSCC அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். இந்த அக்கவுண்டில் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1000 மற்றும் அதிகபட்சம் ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெபாசிட்கள் ரூ.100-ன் மடங்குகளில் செய்யப்பட வேண்டும்.

அதேபோல ஒரு அக்கவுண்ட்டிற்கு ஒரு டெபாசிட்டிற்கு மட்டுமே அனுமதி. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அக்கவுண்ட்ஸ்களிலும் உள்ள மொத்தத் தொகை ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும்வரை, ஒரு டெபாசிட்டருக்கு அக்கவுண்ட்ஸ்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.

விளம்பரம்

எனினும், ஒரே வாடிக்கையாளர் இந்த திட்டத்தின் கீழ் 22 அக்கவுண்ட்ஸ்களை ஓபன் செய்வதற்கு இடையே 3 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். ஏப்ரல் 2023-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போதைய நிலவரப்படி மார்ச் 2025 வரை தொடரும். மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்திற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம்.

sscnr

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்றால் என்ன?

விளம்பரம்

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது வருமான வரி சட்டம் 80C செக்ஷனின் கீழ் நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

MSCC மற்றும் SSY இடையிலான வேறுபாடு என்ன?

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது இரண்டு வருட முதலீட்டு காலத்துடன் கூடிய குறுகிய கால திட்டமாகும். அதே நேரம் சுகன்யா சம்ரிதி திட்டமானது பெண் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் நீண்ட காலத்தை கொண்ட ஸ்மால் டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

2015-ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் குடும்பங்கள் தங்கள் வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது மற்றும் இந்த வட்டி ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. மேலும் SSY திட்டத்தில் செக்ஷன் 80C-ன் கீழ் வரி சலுகைகள் உள்ளன.

10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு SSY கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்திற்கான முதலீட்டு காலம் என்பது குறைந்தபட்சம் 15 வருடங்கள் பங்களிப்பாக உள்ளது.

விளம்பரம்

குறிப்பிட்ட பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு அவர்களின் உயர்கல்விச் செலவுகளுக்காக முதலீட்டிலிருந்து பகுதியளவு பணம் திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் அக்கவுண்ட்டை 21 வருடங்களில் முதிர்ச்சியடையும்போதோ அல்லது 18 வயதை எட்டிய பிறகு, குறிப்பிட்ட பெண்ணின் திருமணம் நடந்தாலோ க்ளோஸ் செய்துகொள்ளலாம்.

.

Read More

Previous Post

Tamilmirror Online || அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Next Post

RCB vs RR | “ஆர்சிபி வெல்லும்” – சுனில் கவாஸ்கர் கணிப்பு | phenomenal rcb will walk over rajasthan royals sunil gavaskar

Next Post
RCB vs RR | “ஆர்சிபி வெல்லும்” – சுனில் கவாஸ்கர் கணிப்பு | phenomenal rcb will walk over rajasthan royals sunil gavaskar

RCB vs RR | “ஆர்சிபி வெல்லும்” - சுனில் கவாஸ்கர் கணிப்பு | phenomenal rcb will walk over rajasthan royals sunil gavaskar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin