Last Updated:
சுமார் 15,000 வீரர்கள் இந்த ஒட்டுமொத்தப் பணிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பிடிப்பதற்காக அமெரிக்கா பல நூறு கோடிகளை செலவிட்டுள்ளது. அதுபற்றிய தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
நேற்று முன்தினம் ஜனவரி 3-ம் தேதி நடந்த ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ மூலம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவின் அதிரடிப்படையான டெல்டா ஃபோர்ஸ் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் நிகோலஸ் கைது செய்யப்பட்டால் என டொனால்டூ ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டபோது பெரும்பாலானோர் அதனை கிண்டலாக பார்த்தனர். ஆனால் அடுத்தடுத்து, அமெரிக்க படைகள் கைது செய்து செல்லும் நிகோலஸ் மதுரோவின் ஃபோட்டோக்களை ட்ரம்ப் வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
அமெரிக்கா மதுரோவை ஒரு நாட்டின் அதிபராகப் பார்க்காமல், ஒரு ‘சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக’ கருதுகிறது. மதுரோவின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, அமெரிக்காவிற்குள் டன் கணக்கில் கோகெய்ன் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்காகவே அவர் மீது பல ஆண்டுகளாக கிரிமினல் வழக்குகள் இருந்தன.
அமெரிக்காவின் எதிரிகளான சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுடன் மதுரோ மிக நெருக்கமான உறவை வைத்திருந்தார். இது தென் அமெரிக்கப் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
இந்நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தந்தாலே ரூ. 440 கோடி வரை பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட F-35 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பறக்கும் நேரம், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவு ஒரு மணி நேரத்திற்கு பல கோடிகளைத் தொட்டது. சுமார் 15,000 வீரர்கள் இந்த ஒட்டுமொத்தப் பணிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
தகவல் தந்தாலே ரூ. 440 கோடி பரிசு.. வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்கா செலவிட்டது எவ்வளவு தெரியுமா?


