ஒட்டுமொத்தமாக, தங்கம் மற்றும் வெள்ளியைப் போலல்லாமல், அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிக தேவை உள்ள உலோகங்களாக இவை மாறலாம் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, அவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும். பங்குச் சந்தைகளில் இவற்றுடன் தொடர்புடைய ETFகள் மற்றும் பங்குகள் உள்ளன. முதலீடு செய்ய விரும்புவோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளலாம். உலகளாவிய நிபுணர்கள் மற்றும் அறிக்கைகளின் மதிப்பீடுகளின்படி, இந்த உலோகங்களில் முதலீடு செய்வது அதிக லாபத்தைத் தரும். உதாரணமாக, ஒவ்வொரு உலோகத்திலும் ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், 2030ஆம் ஆண்டுக்குள், கிராஃபைட் ரூ.3.5 லட்சம், லித்தியம் ரூ.3 லட்சம், தாமிரம் ரூ.2 லட்சம், கோபால்ட் ரூ.2 லட்சம், நிக்கல் ரூ.1.7 லட்சம் மதிப்புடையதாக இருக்கும். மொத்தப் பணம் ரூ.12 முதல் ரூ.13 லட்சம் வரை இருக்கலாம்.


