Last Updated:
“இதை செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம்” என்று ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கு தெரியும். மோடி ஒரு நல்ல மனிதர். ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம்” என்று எச்சரித்துள்ளார்.
Jan 05, 2026 11:15 AM IST


