முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இதேவேளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கடந்த (30) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை எதிர்வரும் 2026 ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் கடந்த (31) உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

