Last Updated:
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அமோலி மெர்கரி கால்வாய் கரையில் அகிலேஷ் யாதவ் என்ற 25 வயது நபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் நண்பருடன் பார்ட்டிக்குச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு, கால்வாயில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கை, கால்களைக் கட்டி கொலை செய்த நண்பர் போலீசில் சிக்குவாரா?
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அமோலி மெர்கரி கால்வாய் கரையில் அகிலேஷ் யாதவ் என்ற 25 வயது நபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அவரது நண்பரே அவரை அழைத்துச் சென்று கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு நண்பருடன் பார்ட்டிக்குச் சென்ற அகிலேஷ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வந்தநிலையில், கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகிலேஷின் உடலை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிய நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் அகிலேஷின் உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் இருப்பதும், இரு கைகளும், கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அவரை கொலை செய்து பின்னர் கால்வாயில் வீசியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி, நண்பர் சூரஜ் பாண்டே என்பவருடன் பார்ட்டிக்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார் அகிலேஷ். அதன் பிறகு அகிலேஷ் வீடு திரும்பவில்லை என்றும், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Jan 04, 2026 10:13 PM IST
நண்பருடன் பார்ட்டிக்குச் சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீச்சு – கொலையாளி சிக்குவாரா…?


