Last Updated:
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமாகி விட்டன. ரயில் நிலையத்தில் பெரும் தீ விபத்திற்கான காரணம் என்ன?
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தின் இருசக்கர வாகனங்களில் பிடித்த தீயால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகிவிட்டது. ஒரு வாகனத்தில் பிடித்த தீ அடுத்தடுத்த வாகனங்களில் பிடித்து, அதன் பெட்ரோல் டேங்குகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்குகள் வெடித்து சிதறியதால் தீ மேலும் பரவி உள்ளது. சுமார் 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சோதனை ஓட்டத்திற்காக தயார் நிலையில் இருந்த ரயில் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததாகவும், அதில் ஏற்பட்ட மின்கசிவால் அருகே இருந்த இருசக்கர வாகனங்களிலும் தீ பிடித்ததாகவும் கூறப்படுகிறது. ரயில்வே மின்சார கம்பியில் இருந்து தீ கசிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவியதில், ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 400 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்துவிட்டன. தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


