தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட கூடும் என்று தகவல்கள் பரவியுள்ளன. இதனால் அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தர வரிசையில் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எளிதாக அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது.
இந்த தொடரில் சென்னையின் வெற்றிக்கு முன்னாள் கேப்டன் தோனி மிக முக்கிய பங்கு வகித்தார், பேட்டிங்கில் சில பந்துகள் மட்டுமே அவர் எதிர்கொண்டாலும்இ அவற்றை சிக்சரும் பௌண்டரியமாக மாற்றி அணியின் நெட் ரன்ரேட் உயர்வதற்கு காரணமாக இருந்தார். ஃபில்டிங்கின்போது மிக துல்லியமான இடங்களில் வீரர்களை நிறுத்தி, எதிரணிக்கு தோனி கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் கேப்டன் ருதுராஜா அல்லது தோனியா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஃபில்டிங் செய்யும் போது வீரர்கள் பலரும் தோனியின் உத்தரவுக்காக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் சென்னை அணி கோப்பை வென்ற கையோடு, தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் பரவின. இந்த சூழலில் ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது.
இதையும் படிங்க – ஐபிஎல் 2024: பிளே ஆஃப் போட்டிகளின் முழு அட்டவணை – வெல்லப்போவது யார்?
தோனி தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். 2020 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி அறிவித்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு குறித்த அறிவிப்பை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்க கூடும் என்று தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)