Last Updated:
புத்தரின் நினைவுச் சின்னங்களை இந்தியா மீட்டது பெருமை என பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சர்வதேச கண்காட்சியில் தெரிவித்தார்.
இந்தியாவிடம் இருந்து அபகரிக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை மீட்டு வந்தது பெருமையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புத்தர் தொடர்பான சர்வதேச கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காலனித்துவ ஆட்சியின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட புத்தரின் நினைவு சின்னங்கள் கடந்த மே மாதம் ஹாங்ஹாங்கில் ஏலத்தில் விடப்பட இருந்த நிலையில், இந்தியாவின் தொடர் முயற்சியால் அவை தடுத்து நிறுத்தப்பட்டு இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டன. அந்த நினைவு சின்னங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
புத்த மத கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் கண்டு ரசித்தார்.
Delhi,Delhi,Delhi


