சிங்கப்பூர் டோட்டோ லாட்டரியில் புத்தாண்டு சிறப்பு குலுக்கல் பரிசை மூன்று பேர் தட்டிச் சென்றனர்.
இதில் ஒவ்வொருவருக்கும் சுமார் S$2.65 மில்லியன் தொகை பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 2026 ஜன.1 முதல் ஓட்டுநர்கள் மற்றும் லாரிகளுக்கு வந்துள்ள மாற்றங்கள்
ஜனவரி 2ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த சிறப்பு குலுக்களுக்கான முதல் பரிசுத் தொகை ஆரம்பத்தில் S$5 மில்லியன் என்றும் பின்னர் S$6.8 எனவும் உயர்ந்தது.
ஆனால் டிசம்பர் மாதம் நடந்த கடைசி டோட்டோ குலுக்கலில் முதல் பரிசை யாரும் வெல்லாத காரணத்தால், அதன் பரிசுத்தொகை S$6.8 மில்லியனாக உயர்ந்தது.
குலுக்கல் நேற்று இரவு முடிந்த நிலையில், முதல் பரிசான S$7,960,105 சிங்கப்பூர் டாலரை மூன்று பேர் அள்ளிச் சென்றனர், ஒவ்வொருவருக்கும் S$2,653,368 என்ற தொகை பகிரப்படும்.

இதில் முதல் பரிசை வென்ற அதிஷ்ட எண்கள் 11, 18, 20, 32, 38 மற்றும் கூடுதல் எண் 39 ஆகும்.
வெற்றி பெற்ற டிக்கெட்டுகள்
முதல் இரு டிக்கெட்டுகள் QuickPick System 7 Entry மற்றும் iToto System 12 முறையிலும், மூன்றாவது டிக்கெட் 1 System 12 Entry முறையில் அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள Singapore Pools கிளையிலும் வாங்கப்பட்டது.
இரண்டாம் பரிசை 17 பேர் வென்றனர், ஒவ்வொருவருக்கும் தலா S$98,578 பரிசு பிரித்து கொடுக்கப்படும்.

Singapore Pools website
அடுத்த டோட்டோ லாட்டரி குலுக்கல் நாளை மறுநாள் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும். அதன் பரிசுத்தொகை S$1 மில்லியனாக உள்ளது.
சிங்கப்பூரில் “2026 பொது விடுமுறை” நாள்கள்: ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
The post சிங்கப்பூர் டோட்டோ லாட்டரி: ரூ55.8 கோடி புத்தாண்டு சிறப்பு பரிசை தட்டிச் சென்ற மூவர்! appeared first on Tamil Daily Singapore.

