இந்தியாவில் Redmi Pad 2 Pro டேப்லெட்டின் விலை குறித்த விவரங்கள் தொடர்பான தகவல்கள் சில வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த டேப்லெட் 6GB ரேம் மற்றும் 128GB வேரியன்ட் உடன், இந்தியாவில் சுமார் ரூ.25,000 என்ற விலை அளவில் இருக்கும் என்று தெரிகிறது. போலவே இந்த டேப்லெட்டின் மற்றொரு வேரியன்ட்டான 8GB/128GB-ன் விலை ரூ.28,000 என்றும், 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் கூடிய ஹை-என்ட் மாடலின் விலை ரூ.30,000 என்றும் நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.


