கடந்தாண்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதனால் நடுத்தர மக்கள் கவலையடைந்தாலும், முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தியாக இருந்தது. ஜனவரி 1ஆம் தேதி சந்தை அறிகுறிகளின்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13,488ஆக இருந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12,364ஆக இருந்தது. அதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2.37 லட்சமாக இருந்தது. 2025ல் தங்கத்தின் விலை 73 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதுவே, வெள்ளியின் விலை கிட்டத்தட்ட 164 சதவீதம் உயர்ந்தது. வலுவான முதலீட்டு வரவு மற்றும் தொழிலகளின் தேவை அதிகரித்ததே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.


