Last Updated:
ஜோடி ஜோடியாக இவர்கள் செய்த அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஹரியானா மாநிலத்தில் கார்களில் சாகச பயணம் மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து எல்லைமீறிய ஜோடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள சாலையில் 10க்கும் மேற்பட்ட கார்களில் கும்பலாகக் கிளம்பிய ஜோடிகள், கார் கண்ணாடிகளைத் திறந்து உடலை வெளியே நீட்டி கொண்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர், கார் ரூப் டாப்பை ஓபன் செய்து மேலே ஏறி நின்று கொண்டாட்ட போதையில் மிதந்தனர். ஜோடி ஜோடியாக இவர்கள் செய்த அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
லாரி, ட்ரக் போன்ற வாகனங்கள் உரசினால் என்னவாகும்? அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் ஏன் இப்படியொரு விபரீத செயல்? ஓடும் காரில் உயிரை பயணம் வைத்தது ஏன்? எல்லாம் ரீல்ஸ் வீடியோக்காகதான். புத்தாண்டு கொண்டாட்டத்தில் காரில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முன்கூட்டியே பிராக்டீஸ் செய்த ஜோடிகளின் முன்னோட்ட வீடியோ எடுத்துள்ளனர். புத்தாண்டு பிறந்ததும் ஹரியானா சாலையில் சீறிப்பாய்ந்து ரீல்ஸ் எடுக்க தயாரானவர்களின் பிராக்டீஸ் வீடியோ இப்போது இணையத்தில் கசிந்து சாகசத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் விசாரணையில் இழுத்து விட்டுள்ளது.
கார்களின் பதிவான எண்களை வைத்து விசாரித்த போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளனர். சில கார்களின் பதிவு எண்கள் வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் சிசிடிடி கேமிரா பதிவுகளை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுக் காவல் நிலைய விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் தலைமறைவான மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடுவதற்கு முன்பே சர்ச்சை.. காரில் காதல் ஜோடிகள் செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?


