யாழ்ப்பாணத்தில் அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் கடந்த சில
தினங்களுக்கு முன்னர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருகின்றார்.
விசாரணை
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த பெண்ணை நேற்றையதினம் சுன்னாகம்
காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

