Last Updated:
போதிய மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு இல்லாததால், தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் குறையாமல் இருப்பதையும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
2026-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாகிஸ்தான், மிகக்கடுமையான மக்கள் தொகை பெருக்கச் சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது
பாகிஸ்தான் தற்போது உலகின் 5-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஐநா சபையின் தகவல்படி, அந்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 2.55% ஆக உள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக அதிகப்படியான வளர்ச்சியாகும்.
ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, இந்த மக்கள் தொகை பெருக்கம் பெரும் சுமையாக மாறியுள்ளது. வளங்கள் உணவு, நீர், வேலைவாய்ப்பு பற்றாக்குறையாக உள்ள நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்வது கடினம் என ஐநா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அவர்களுக்குச் சரியான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கத் தவறினால், அது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போதிய மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு இல்லாததால், தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் குறையாமல் இருப்பதையும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
2026-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்கடங்காமல் போகும் என்று ஐநா முகமை எச்சரித்துள்ளது.


