Last Updated:
காசியாபாத்தில் ஹிந்து ரக்ஷா தள் வீடுவீடாக வாள்கள் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் வீடு வீடாகச் சென்று வாள்களை விநியோகித்த ஹிந்து ரக்ஷா தள் என்ற அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்படும் வன்முறையில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுவதாக கூறி, ஹிந்து ரக்ஷா தள் என்ற அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வாள்களைக் கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி உள்ளிட்ட 16 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.


