Last Updated:
ஷமியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள பிசிசிஐ உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவது குறித்த மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவரை பிசிசிஐ ஓரங்கட்டுவதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் 35 வயதான முகமது ஷமி, தனது காயங்களில் இருந்து மீண்டு தற்போது சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். பிசிசிஐ தேர்வுக் குழுவினர் அவரை 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாட வைக்கலாமா என்ற ஆலோசனையில் உள்ளனர்
ஏற்கனவே ரோஹித் சர்மா, விராட் கோலி என 2 சீனியர் வீரர்கள் 2027 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஷமியின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள பிசிசிஐ உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வரும் ஜனவரி 11 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்பதால், அனுபவம் வாய்ந்த ஷமி அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, “ஷமி எப்போதுமே தேர்வாளர்களின் பார்வையில் இருக்கிறார். அவருடைய திறமை மீது யாருக்கும் சந்தேகம் இல்லை, அவரது உடற்தகுதி மட்டுமே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தது.


