கோத்த பாரு, மெலூர் பொதுச் சந்தையில் டிசம்பர் 25 அன்று கலவரத்தை ஏற்படுத்தியதாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கோத்த பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
ரோஸிதா ரம்லி 47, அவரது மகள் அலீயா மைசாரா ஹஸ்புல்லா 19, மருமகள் சித்தி நோர் பாக்யா அப்துல்லா19, அத்துடன் சித்தி சாரா சுயைனி 30, அவரது தங்கை சித்தி மஸ்துரா சுயைனி 28, ஆகியோர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கடந்த வாரம் சந்தையில் நடந்த சண்டையின் வீடியோ பரவியதைத் தொடர்ந்து மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.




