Last Updated:
டக் பிரேஸ்வெல் ஓய்வு பெற்ற அதே நேரத்தில், அவரது சகோதரர் மைக்கேல் பிரேஸ்வெல் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்த உள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே விலா எலும்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரேஸ்வெல், அதே ஆண்டு ஹோபார்ட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு வரலாற்றுச் வெற்றியைப் பெற்றுத் தந்தது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
28 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். அவரது 17 ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் பங்களிப்பிற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.


