Last Updated:
கிளப்பின் முன்னேற்றத்திற்காகவும், புதிய வெளிநாட்டு வீரரை அணிக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி கால்பந்தாட்ட அணியின் முக்கிய நட்சத்திர வீரரான தியாகோ ஆல்வ்ஸ் (Tiago Alves) அணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடரில் விளையாடும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி, தனது பிரேசிலிய முன்கள வீரர் தியாகோ ஆல்வ்ஸ் உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பு சீசனில் பிளாஸ்டர்ஸ் அணிக்காகத் தனது திறமையை வெளிப்படுத்திய தியாகோ, காயங்கள் மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் நிலவியது.
ஜனவரி மாதம் வீரர்களுக்கான இடமாற்ற சாளரம் நடைபெறவுள்ள நிலையில், தியாகோ ஆல்வ்ஸின் வெளியேற்றம் அணிக்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
Dec 30, 2025 10:23 PM IST


