ஜேடைட் அரிதானது மற்றும் உயர் தரம் வாய்ந்தது. இது தெளிவான மரகத பச்சை நிறம், வெளிப்படைத்தன்மை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது. இது மியான்மரில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், அங்கும் கூட, 1 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இதன் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் குறைவதாக சொல்லப்படுகிறது. ஆகையால், தேவை அதிகரிக்கும்போது, இதன் விலையும் அதிகரிக்கிறது.


