நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு நாமக்கல், எருமபட்டி சேந்தமங்கலம், புதுச்சத்திரம், பவித்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட பருத்திகளை மூட்டையாக கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் பருத்தி ஏலம் அதிகாரிகள், வியாபாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
பருத்தி ஏலத்திற்கு 600 மூட்டைகள் வந்த நிலையில் ஆர்.சி.ஹெச் ரகம் பருத்தி ரூ.7900க்கும், மட்ட ரகம் பருத்தி ரூ.5035 க்கும் மொத்தமாக ரூ.15 இலட்சத்திற்கு பருத்தி ஏலம் போயுள்ளது. பருத்திகளை கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச்சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
