Last Updated:
இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது.
ஆரவல்லி மலைத்தொடர் வழக்கில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது. இந்த மலைத்தொடரில் கிரானைட், பளிங்குக் கல், தங்கம், தாமிரம், டங்ஸ்டன், துத்தநாகம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்நிலையில், இந்த மலைத்தொடரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழு வழங்கிய வரையறையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.
அப்போது நிபுணர் குழுவின் அறிக்கை, நீதிமன்ற கருத்துகள் தவறாக பொருள் கொள்ளப்படுவதாக கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


