‘நீரிழிவு முகாமையில் உணவு, உள்ளம், உடற்பயிற்சி’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். சித்த மருத்துவமனையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இந்நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளதாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சித்த மருத்துவ நிபுணர் வெ.ஜெகதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ.கோகுலன், கைதடி சித்த போதனா மருத்துவமனையின் மருத்துவ பொறுப்பதிகாரி சியாமா துரைரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும், ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
The post ‘நீரிழிவு முகாமையில் உணவு, உள்ளம், உடற்பயிற்சி’ நூல் வெளியீட்டு விழா appeared first on Thinakaran.
