Last Updated:
காசி கங்கையில் அரைகுறை ஆடைகளுடன் குளித்த வெளிநாட்டினரை உள்ளூர்வாசிகள் எதிர்த்து அனுப்பினர்.
காசி கங்கையில் அரைகுறை ஆடைகளுடன் குளித்த வெளிநாட்டினருக்கு உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசி, இந்துக்களின் புனித நகரமாக விளங்குகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இந்துக்களும், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் இந்துக்களும் காசிக்கு ஒருமுறையாவது சென்று கங்கையில் குளித்தால் பாவங்கள் கரைந்து, முக்தி கிடைக்கும் என நம்புகின்றனர்.
காசி செல்லும் பக்தர்கள் கங்கையில் பயபக்தியுடன் நீராடுவர். இந்நிலையில், காசிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், கங்கையில் குளிக்கத் தயாராகினர். அரை குறை ஆடைகளுடனும், கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடனும் இறங்க முற்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் காசி கங்கைக்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Varanasi,Uttar Pradesh


