Last Updated:
SIR Assam voter list | அஸ்ஸாம் வரைவு வாக்காளர் பட்டியலில் 10.56 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டோர் ஜனவரி 22க்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அஸ்ஸாமில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 11 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபரில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த நவம்பர் 22 -ம் தேதி முதல் டிசம்பர் 20 -ம் தேதிவரை வீடு வீடாகச் சென்று எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இறப்பு, இடப்பெயர்வு, போலி பதிவுகள் காரணமாக 10 லட்சத்து 56 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பெயர் விடுபட்ட வாக்காளர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவும், மீண்டும் பதிவுசெய்ய விண்ணப்பிக்கவும் ஜனவரி 22 கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
December 28, 2025 12:16 PM IST


