Last Updated:
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பணவியல் கொள்கை தளர்வுக்கு ஏற்ப வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களைக் குறைத்து மக்கள் கடன் பெறுவதை பல வங்கிகள் எளிதாக்கியுள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தனது முந்தைய வட்டி விகிதங்களுடன் ஒப்பிடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் லோன் தயாரிப்புகளுக்கான வட்டியை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு 2025 டிசம்பர் 18 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய பணவியல் கொள்கை தளர்வுக்கு ஏற்ப வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களைக் குறைத்து மக்கள் கடன் பெறுவதை பல வங்கிகள் எளிதாக்கியுள்ளன. அந்த வகையில் இந்தத் துறையின் முதல் வங்கிகளில் ஒன்றாக UBI வங்கி திகழ்கிறது.
திருத்தப்பட்ட வட்டி விகித கட்டமைப்பின்படி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 பேஸிஸ் பாயின்ட்ஸ் குறைக்கப்பட்டுள்ளன. முந்தைய 7.45% ஆண்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இப்போது வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.15% முதல் தொடங்குகிறது. அதேபோல் வாகன கடன் வட்டி விகிதங்கள் 40 பேஸிஸ் பாயின்ட்ஸ் குறைக்கப்பட்டுள்ளன.
முந்தைய 7.90% ஆண்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில், இப்போது வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.50% முதல் தொடங்குகிறது. தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் 160 பேஸிஸ் பாயின்ட்ஸ் குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இருந்த 10.35% என்ற விகிதத்தில் இருந்து, இப்போது வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 8.75% முதல் தொடங்குகின்றன.
பேஸ் ரேட் குறைப்பை தவிர யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்கும் தகுதியுள்ள பசுமை வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்கு ஆண்டுக்கு 0.10% கூடுதல் சலுகையை வழங்குகிறது. முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் 5, 2025 அன்று ரெப்போ ரேட்டை 25 பேஸிஸ் பாயின்ட்ஸ்கள் குறைத்து 5.25%-ஆக நிர்ணயித்தது. இது 2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது குறைப்பாகும், மேலும் இந்த ஆண்டுக்கான மொத்தம் இதுவரை 125 பேஸ் பாயின்ட்ஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசும் வாகனத் துறைக்கான ஜிஎஸ்டி விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.
இந்த வட்டி விகித திருத்தத்தின் மூலம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, விவேகமான கடன் வழங்கும் தன் நிலையை தொடர்ந்து பராமரிக்கும் அதே நேரம், கடன் வாங்கும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் வீடு வாங்குவோர், வாகனம் வாங்குவோர் மற்றும் தனிநபர் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் டிசம்பர் 18, 2025 முதல் பொருந்தும். மேலும் அவை வாடிக்கையாளரின் தகுதி, கடன் விவரம் மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.


