Last Updated:
தென்னாப்பிரிக்காவிடம் 0-2 எனத் தோற்றது என கடந்த ஓராண்டில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கென புதிய பயிற்சியாளரை நியமிக்கும் திட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீரை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு முன்பாக கம்பீர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடர்களை இழந்து ‘ஒயிட்வாஷ்’ ஆகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் சரிவைச் சரிசெய்ய, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் வி.வி.எஸ். லக்ஷ்மணை டெஸ்ட் அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கம்பீரையும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் லக்ஷ்மணைப் பயிற்சியாளராகவும் பிரிக்கும் திட்டத்தை பிசிசிஐ பரிசீலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


