Last Updated:
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது மற்றும் தொழிலாளர் விதிமுறை மீறல்கள் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு ஒன்று நடப்பு ஆண்டில் இந்தியர்களை அதிகம் வெளியேற்றியுள்ளது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளிலிருந்து 24,600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பலரும் எதிர்பார்த்தது போல அமெரிக்கா முதலிடத்தில் இல்லை; மாறாக சவூதி அரேபியா தான் 11,000-க்கும் அதிகமான இந்தியர்களைத் திருப்பி அனுப்பி முதலிடத்தில் உள்ளது.
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது மற்றும் தொழிலாளர் விதிமுறை மீறல்கள் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 3,800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று கருதப்படுகிறது.
வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து மியான்மர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் அதிகப்படியான இந்தியர்களை நாடு கடத்தியுள்ளன. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சைபர் மோசடி’ கும்பல்களிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதும் இதில் அடங்கும்.


